மேலும் 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி

 

மேலும் 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் நீர் நிலைகளில் சிக்கி உயிரிழந்தோருக்கு தொடர்ந்து முதல்வர் பழனிசாமி நிதியுதவி அளித்து வருகிறார்.

மேலும் 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி

அந்த வகையில் முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் ராஜன் நகர் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் மகன் செல்வன் புவனேஷ் குமார் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் லோகேஸ்வரன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜாகீர்உசேன் என்பவரின் மகன் தமீம் அன்சாரி மற்றும் சிவகுமார் என்பவரின் மகள் செல்வி ஏஞ்சல் அங்கு இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் முருகன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் .

மேலும் 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன், கரூர் மாவட்டம் தொண்டன்மங்களம் பொன்னுசாமி மகள் சந்தியா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் அழகு, கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் வட்டத்தை சேர்ந்த தங்கசாமி என்பவரின் மகன் செல்வன் ,அதேபோல் மஞ்சநாயக்கன்பட்டி வந்தகோட்டையை சேர்ந்த செல்வன் கண்ணன், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சேர்ந்த சந்தோஷ், மதுரை மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் என பல்வேறு நிகழ்வுகளால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.