’நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்கூலுக்குப் போறேன்’ சொல்லும் பிரபலம் யார் தெரியுமா?

’நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்கூலுக்குப் போறேன்’ சொல்லும் பிரபலம் யார் தெரியுமா?

உலகை மாற்றவும் சுதந்திரமாக தன் கருத்தை வெளிப்படுத்தவும் வயது ஒரு விஷயமே இல்லை என்பதை நிருப்பித்தவர் கிரேட்ட தன்பர்க்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவிதான் கிரேட்ட தன்பர்க். மாறிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் இந்த உலகம் அடையும் துன்பம் பற்றிய ஐநா அவையில் துணிச்சலோடு ’உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? என்று கேள்வியைக் கேட்டவர் கிரேட்டா தன்பர்க்.

’நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்கூலுக்குப் போறேன்’ சொல்லும் பிரபலம் யார் தெரியுமா?

உலக தலைவர்கள் கிரேட்டா தன்பர்க்கின் பேச்சைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார்கள். ஒரு பள்ளி மாணவி துணிவு, தெளிவும், நேர்மையும் கண்டு உலகே வியப்படைந்தது.

அவரது உரையில் கடந்த 30 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தைப் பற்றிய விஞ்ஞானிகள் சொல்வதை உலக நாடுகள்  கேட்க மறுப்பது குறித்து காத்திரமான தன் கருத்துகளைப் பகிர்ந்தார்.

அதன்பின் உலகமே கொண்டாடும் சுற்றுச்சூழல் போராளியாக கிரேட்டா தன்பர்க் மாறிபோனார்.

’நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்கூலுக்குப் போறேன்’ சொல்லும் பிரபலம் யார் தெரியுமா?

பருவநிலை மாற்றம் குறித்து நீண்ட பிரச்சாரப் பயணம் முடிந்து பள்ளிக்குச் செல்வதை ட்விட் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

”நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிச் செல்கிறேன். மீண்டும் பள்ளிக்குச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்பதாகப் பதிவிட்டுள்ளார் கிரேட்டா தன்பர்க்.