“நாட்டுக்காக 3 போரில் ஈடுபட்டேன்… ஆனா என்னயவே பயங்கரவாதினு சொல்றாங்க” – விவசாயி முதியவர் உருக்கம்!

“நாட்டுக்காக 3 போரில் ஈடுபட்டேன்… ஆனா என்னயவே பயங்கரவாதினு சொல்றாங்க” – விவசாயி முதியவர் உருக்கம்!

டெல்லியின் எல்லைகளில் மூன்று மாதங்களைத் தாண்டி வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிவருகின்றனர். 10 கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படாததால் குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணியாக உருப்பெற்றது. அது ஒருசிலரால் வன்முறையாகத் திசைமாற்றப்பட்டு, போராட்டத்தின் நோக்கமே சிதைந்துபோனது.

“நாட்டுக்காக 3 போரில் ஈடுபட்டேன்… ஆனா என்னயவே பயங்கரவாதினு சொல்றாங்க” – விவசாயி முதியவர் உருக்கம்!

விஷயம் அதுவல்ல. இந்த வன்முறைக்குத் துளியும் சம்பந்தமில்லாத 80 வயதான விவசாயியும் ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான ஒருவரை டெல்லி போலீஸ் கைதுசெய்திருக்கிறது. டெல்லியின் எல்லையில் அமைதியான முறையில் குடிலில் போராடிக்கொண்டிருந்த அவரிடம் தங்களுடைய கைங்கரியத்தைக் காட்டியிருக்கிறது டெல்லி போலீஸ்.

“நாட்டுக்காக 3 போரில் ஈடுபட்டேன்… ஆனா என்னயவே பயங்கரவாதினு சொல்றாங்க” – விவசாயி முதியவர் உருக்கம்!

கைதுசெய்யப்பட்டவரின் பெயர் குர்முக் சிங் (80). 1962ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த அவர் அந்த வருடமே இந்திய-சீனப் போரில் பங்கேற்றிருக்கிறார். 1965இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர், அடுத்த ஆறு வருடங்களில் நிகழ்ந்த வங்காளதேச விடுதலைப் போர் என மொத்தமாக 3 போர்களில் இந்தியாவின் சார்பில் சண்டை செய்திருக்கிறார் குர்மீக் சிங்.

“நாட்டுக்காக 3 போரில் ஈடுபட்டேன்… ஆனா என்னயவே பயங்கரவாதினு சொல்றாங்க” – விவசாயி முதியவர் உருக்கம்!

1984ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அவர் விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ராணுவ வீரனைத் தான், கைதுசெய்த போலீஸ்கள் பயங்கரவாதிகள் என்று திட்டியிருக்கிறார்கள். குண்டுக்கட்டாக தூக்கி லத்தியால் தாக்கி துன்புறுத்தியிருக்கிறார்கள். தனக்கு நேர்ந்த இந்த அவமானம் சாகும் வரை மறக்காது என்று உருக்கமாகப் பேசுகிறார் குர்மீக்.

“நாட்டுக்காக 3 போரில் ஈடுபட்டேன்… ஆனா என்னயவே பயங்கரவாதினு சொல்றாங்க” – விவசாயி முதியவர் உருக்கம்!

பணமதிப்பிழப்பின்போது ஏடிஎம்மில் வரிசையில் நிற்பதற்கு மக்கள் அரசை விமர்சித்தபோது, நொடிக்கொரு முறை அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள் கஷ்டப்படுகிறார்கள்; இங்கே உங்களால் கஷ்டப்பட முடியாதா என அனைத்து பாஜக தலைவர்களும் முறை தவறாமல் கேட்டார்கள். ஒரு முன்னாள் ராணுவ வீரனைப் பயங்கரவாதி என்று சொல்லும்போது எங்கே போனது அவர்களின் ராணுவ மற்றும் தேச பக்தி. இதுபோன்ற போலி தேசபக்தியை விடுத்து நாட்டுக்காகத் தியாகம் செய்பவர்களை மதிப்பதும், விவசாயிகளிடம் சுமுகமான பேச்சுக்கு உடன்பட வேண்டியதும் மத்திய அரசின் தலையாயக் கடமை.