“ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த இஷ்டமில்லை” – கோர்ட்டில் நடிகர் விஜய் திட்டவட்டம்!

“ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த இஷ்டமில்லை” – கோர்ட்டில் நடிகர் விஜய் திட்டவட்டம்!

நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

“ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த இஷ்டமில்லை” – கோர்ட்டில் நடிகர் விஜய் திட்டவட்டம்!

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

“ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த இஷ்டமில்லை” – கோர்ட்டில் நடிகர் விஜய் திட்டவட்டம்!

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை நேற்று விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இச்சூழலில் முந்தைய வழக்கு இன்று மீண்டும் தனி நீதிபதி சுப்பிரமணியம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

“ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த இஷ்டமில்லை” – கோர்ட்டில் நடிகர் விஜய் திட்டவட்டம்!

அப்போது ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் கொரோனா நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று விஜய் தரப்பு பதில் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதால் ரூ.1 லட்சம் வழங்க விரும்பவில்லை என சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு சொகுசு வரி செலுத்த தடைகோரிய விஜய் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.