• February
    25
    Tuesday

Main Area

Main



நான் ஓடிப்போகல: பாஜகவினர் விமர்சனத்தால் மனம் நொந்த விஜய் மல்லையா

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

கடன் தொகையை விட அதிக மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டதாக மோடியே அறிவித்த பின்னும் பாஜகவினர் என்னை கடன் வாங்கிட்டு ஓடிப்போனவன் என ஏன் சொல்கிறார்கள். அசிங்கமாக இருக்கிறது என விஜய் மல்லையா மனம் வருந்தியுள்ளார்.

nsn

கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அதற்கு பாஜவினர், கடன் வாங்கிட்டு ஓடிப்போனவன் என விஜய் மல்லையாவை விமர்சித்து வந்தனர்.

ச

இதுகுறித்து விஜய் மல்லையா, மார்ச் 29-ஆம் தேதி மோடி அளித்த பேட்டி ஒன்றில், மல்லையா 9 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருந்தாலும், அவரது 14 ஆயிரம் கோடி மதிப்பிலான சர்வதேச சொத்துக்களை முடக்கியிருப்பதாக கூறப்பட்டதை சுட்டிக்காட்டி என்னை பாஜகவின் செய்தி தொடர்பாளர், 'கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன் என கூறுவது ஏன் என வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.