“தமிழகம் குறித்து பேச விரும்பவில்லை” – மத்திய அமைச்சரை சந்தித்த பின் எடியூரப்பா பரபரப்பு பேட்டி!

“தமிழகம் குறித்து பேச விரும்பவில்லை” – மத்திய அமைச்சரை சந்தித்த பின் எடியூரப்பா பரபரப்பு பேட்டி!

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்தித்து அணை கட்டாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“தமிழகம் குறித்து பேச விரும்பவில்லை” – மத்திய அமைச்சரை சந்தித்த பின் எடியூரப்பா பரபரப்பு பேட்டி!

அடுத்த நகர்வாக சமீபத்தில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அவர் கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கப்படாது என அமைச்சர் கூறியதாக சொன்னார். சில நாட்களுக்கு முன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேகதாது அணை கட்டுவதன் மூலம் இரு மாநிலமும் பயன்பெறும் என்று கூறி பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதிய ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

“தமிழகம் குறித்து பேச விரும்பவில்லை” – மத்திய அமைச்சரை சந்தித்த பின் எடியூரப்பா பரபரப்பு பேட்டி!

இந்தநிலையில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பெங்களூரு வந்தார். கர்நாடக மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டங்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பங்கேற்றார். அப்போது மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கவேண்டும் என கர்நாடகா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

“தமிழகம் குறித்து பேச விரும்பவில்லை” – மத்திய அமைச்சரை சந்தித்த பின் எடியூரப்பா பரபரப்பு பேட்டி!

இதுகுறித்து கஜேந்திர சிங் ஷெகாவத் சட்டப்படி மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். மத்திய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம். மத்திய அரசு உரிய அனுமதியை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழகம் குறித்தும் நான் பேச விரும்பவில்லை” என்று கூறினார்.