நான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை… மாஜி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கதறல்

 

நான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை… மாஜி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கதறல்

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நாஞ்சில் முருகேசன். முன்னாள் எம்எல்ஏவான இவர்மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை… மாஜி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கதறல்

இந்நிலையில், இந்த வழக்கை தடை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாஞ்சில் முருகேசன் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் , 2017 ஆம் ஆண்டு நான் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வருடத்திலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அப்போது எந்தவித புகாரும் அளிக்கப்படாத நிலையில் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று ர்.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது . இந்த வழக்கு தற்போது நாகர்கோயில் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே இந்த வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே , இந்த வழக்கை இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

நான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை… மாஜி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கதறல்

நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தன் தாயார் ஒப்புதலுடன் தன்னை இரண்டு வருடமாக நாஞ்சில் முருகேசன் பாலியல் தொல்லை செய்து வந்தார் என்று, அதாவது 2017 ஆம் ஆண்டு முதல் 2 வருடமாக பலாத்காரம் செய்து வந்தார் என்று 2020இல் போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து நாஞ்சில் முருகேசன் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தோட்டத்திற்குள் தலைமறைவாக இருந்த முருகேசனை 5 தனிப்படைகள் தீவிரமாக தேடி கைது செய்தது.

போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட முருகேசனுக்கு அந்த சிறுமியின் அம்மாவுடன் தொடர்பு இருந்தது என்றும், அதன் மூலமாக பெற்ற தாயே மகளையும் நாஞ்சில் முருகேசன் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்திருக்கிறார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

நான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை… மாஜி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கதறல்

நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் . இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த சூழலில்தான் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார்.

நாஞ்சில் முருகேசனின் இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், இந்த வழக்கு குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார் . மேலும், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.