‘கொரோனாவை துணிவோடு எதிர்கொண்டேன்’ பிரேம் சொல்லும் அனுபவக் கதை!

 

‘கொரோனாவை துணிவோடு எதிர்கொண்டேன்’  பிரேம் சொல்லும் அனுபவக் கதை!

கடந்த ஆண்டு டிசம்பர் முதலே கொரோனா நோய்த் தொற்று உலகை அச்சுறுத்தி வருகிறது. அதிலும் இந்தியாவிலும் இன்றைய தேதி வரை கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ஆயினும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும், நோயிலிருந்து குணம் பெறுபவர்களின் விகிதமும் பெருமளவில் இருப்பது ஆறுதலான செய்திகள்.

கொரோனா நோய்த் தொற்றுள்ளவர்களின் அடையாளங்களை அரசே மறைமுகமாக வைத்திருக்கிறது. ஆயினும், நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசுவதும் சமூக ஊடகங்களில் பதிவு செய்வதும் அதிகரித்து வருகிறது. பிரேம் என்பவர் தான் கொரோனாவிலிருந்து குணம் பெற்று வந்ததைப் பகிர்ந்துள்ளார்.‌

‘கொரோனாவை துணிவோடு எதிர்கொண்டேன்’  பிரேம் சொல்லும் அனுபவக் கதை!

கொரொனாவை வென்ற கதை

கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் கூட இருக்கற நண்பருக்கு சளி பிடிச்சி கூடவே இருமல் வேற. எதுக்கும் செக் பண்ணிருவோம்னு ஜூலை 01-ம் தேதி அன்னிக்கு கொரொனா டெஸ்ட் எடுத்தார். 03-ம் தேதி ரிசல்ட் வந்தது. கொரொனா பாசிட்டிவ்.
உடனே அன்னைக்கே நானும் இன்னொரு நண்பரும் டெஸ்டுக்கு குடுத்திட்டோம். அடுத்த நாள் அவருக்கு ஷார்ஜா எக்ஸ்போ சென்டர்ல வச்சு எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட், பிளட் பிரஷர்னு எல்லாம் செக் பண்ணாங்க. ஓட்டல்கள்ல இடமில்லாததால வீட்லயே ஹோம் குவாரண்டைன் பண்ணச்சொல்லி கையில ஒரு ஸ்மார்ட் வாட்சை கட்டி அனுப்பிட்டாங்க. அது மூலமா எங்க இருக்கோம்னு டிராக்கிங் பண்ண முடியும். எதுவும் சிம்ப்டம்ஸ் இருந்தா சொன்னா கவனிச்சுப்பாங்க.

04-ம் தேதி எங்க ரிசல்ட் வந்திச்சு. எனக்கு பாசிட்டிவ். மற்றொரு நண்பருக்கு நெகட்டிவ். இதுல எனக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை. ரொம்ப நார்மலாவே இருந்தேன். என்னையும் ஷார்ஜா ஹெல்த் டிபார்ட்மெண்ட்லேர்ந்து கூப்டு எல்லா டெஸ்டும் பண்ணி ஸ்மார்ட் வாட்சையும் குடுத்து அனுப்பிட்டாங்க.

‘கொரோனாவை துணிவோடு எதிர்கொண்டேன்’  பிரேம் சொல்லும் அனுபவக் கதை!

மற்றொரு நண்பரை அவரோட ஆபிஸ் மூலமா ஒரு தங்குமிடம் ஏற்பாடு பண்ணி அனுப்பியாச்சு. நாங்க மட்டும் ஒரு ரூம்ல தனிமைப் படுத்திக்கிட்டோம். தனி பாத்ரூம் இருந்தது. இந்தச் சமயம் பார்த்து எங்க பில்டிங் ஃபுல்லா கேஸ் பைப்லைன்ல ஏதோ கோளாறு. ரிப்பேர் பார்த்திட்டிருந்தாங்க. முதல் அஞ்சு நாள் ஓட்டல்ல ஆர்டர் பண்ணி சாப்டோம். சரியானதுக்கப்புறம் சமைச்சு சாப்ட ஆரம்பிச்சோம்.

காலைல எழுந்ததும் இஞ்சி, எலுமிச்சை, மிளகு, தேன் கலந்த பானம். கபசுர குடிநீர் ஒரு நாளும் மறு நாள் முருங்கை இலைப்பொடியில செய்த பானமும். விட்டமின் சி மாத்திரை தினமும் ஒண்ணு. இது தவிர தினமும் ஆவி பிடிக்கறது, உப்பு போட்டு வாய் கொப்பளிக்கறது. இடைல எப்பவும் குடிக்கறதுக்கு வென்னீர் தான். நிறைய வெஜிடபிள்ஸ், பழங்கள், முட்டை, சத்தான சாப்பாடு. இரவு மிளகு, மஞ்சள் சேர்த்த பால்.

10-வது நாள் வரைக்கும் நார்மலாத்தான் இருந்தேன். அதுக்கப்புறம் தான் கொஞ்சம் தொண்டை கவ்வுனிச்சு. லேசா சுரம், மூக்கடைப்பு, இருமல், கூடவே தும்மல்னு எல்லாவித அறிகுறிகளும் ஒரே நாள்ல வந்தது. ???? நம்ம டாக்டர்ஸ் ( Sasithra Dhamodaran, Radha Kumar, Anbarasi Rajkumar) உதவினால ஒரு நாள்ல அதுவும் சரியாகிருச்சு.

‘கொரோனாவை துணிவோடு எதிர்கொண்டேன்’  பிரேம் சொல்லும் அனுபவக் கதை!
உலகத்துல இருக்கற மொத்த மக்கள்ல 80% பேருக்கு வந்து தான் போகும்னு ஏற்கனவே மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க. வந்த சுவடே தெரியாமலாச்சும் அது வந்தே போகும். இனி இந்த வைரஸ் இங்க நம்ம கூட தான் வாழப்போகுது.

கொரொனா உங்களுக்கு வந்திருச்சுன்னா தைரியமா ரொம்ப பாசிட்டிவா இருங்க. நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்குவோம். சத்துள்ள உணவு உட்கொள்ளுவோம். மூச்சுப் பயிற்சி ரொம்ப அவசியம்.

என்னோட 15 நாள் ஹோம் குவாரண்டைன் வெற்றிகரமா முடிஞ்சது. ரொம்ப நாளா நெஞ்சுச் சளியா இருக்கேன்னு கவலைப் பட்டுட்டிருந்தேன். கொரொனாவுக்காக குடிச்ச கஷாயங்களெல்லாம் அதை வெளியேத்திருச்சு. கொரொனாவுக்கு நன்றி. வாங்க ஃப்ரண்ட்ஸ்… கொரொனோவோட வாழ்ந்து பழகுவோம்.

கடைசியாக ஒன்று சொல்லணும், நாங்க டெஸ்ட் பண்ணலைன்னா, எங்களுக்கு பாசிட்டிவ்னே தெரிஞ்சிருக்காது. டெஸ்ட் எடுத்துக்கிட்டதால நாங்க எங்களைத் தனிமைப்படுத்திகிட்டு இன்னும் நாலு பேருக்கு பரபாமல் இருந்தோம்.