“மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்” – மு.க.ஸ்டாலின்

“மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்” – மு.க.ஸ்டாலின்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையும் கொடுங்கள் என்று முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று பலத்த எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

“மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்” – மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு நடத்தும் இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நேற்று ஒரேநாளில் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தருமபுரியை சேர்ந்த ஆதித்யா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

“மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்” – மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள். நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்தியை கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படும் சூழலில் அவர்களுக்கு மன உறுதியை கற்றுக் கொடுங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையும் கொடுங்கள் ப்ளீஸ்” என்று கூறியுள்ளார்.