’’நான் செஞ்ச புண்ணியம்; நமக்கு அது சாபம்’’ -கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் நெகிழவைக்கும் பேச்சு

’’நான் செஞ்ச புண்ணியம்; நமக்கு அது சாபம்’’ -கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் நெகிழவைக்கும் பேச்சு

கடைசி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டாலும், கடைசிவரைக்கும் கொரோனாவின் தீவிரத்தில் இருந்து மறைந்த எஸ்.பி.பி. கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசியது நெகிழவைக்கிறது.

’’நான் செஞ்ச புண்ணியம்; நமக்கு அது சாபம்’’ -கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் நெகிழவைக்கும் பேச்சு

’’கொரோனா பற்றி அது ஒரு கொடுமை;ராட்சசின்னு சொல்ல வேண்டாம். நமக்கு அது சாபம். நாம செஞ்ச தப்புக்கு அது சாபம். இயற்கையை வந்து நாம ரொம்ப வஞ்சனை பண்ணிட்டோம். இயற்கை தாய்க்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் கொடுக்கல.
நம்ம பெரியவங்க எல்லாம் அழகான பூமி, அழகான தண்ணீர் எல்லாம் கொடுத்தாங்க. நாம எல்லாத்தையும் பாழாக்கிட்டு, ஒரு சுடுகாடு மாதிரியான இடத்தை நாம் அடுத்த ஜெனரேசனுக்கு கொடுக்குறோம். என்ன நியாயம் இது? அதனால நடக்குற பலனை நாம் அனுபவிச்சே ஆகணும். இதனால நன்மை கூட நடந்திட்டிருக்கு. இந்தப்பாட்டை நான் செலக்ட் பண்ணுனதுக்கு அதுதான் காரணம்.
’யாதும் ஊரே யாவரும் கேளீர்’. என் ஊர், என் தேசம், என் ஜாதின்னு சாதாரண மனுசங்க பேசுவாங்க. ஆனா, புத்திசாலியா இருக்குறவங்க, எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவாங்க. நம்மகிட்ட ஜாஸ்தியா இருந்தா பகிர்ந்துக்கலாம். பகிர்ந்துக்கலன்னாலும் பரவாயில்ல; தீமை செய்யாம இருந்தா போதும்.

’’நான் செஞ்ச புண்ணியம்; நமக்கு அது சாபம்’’ -கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் நெகிழவைக்கும் பேச்சு

எனக்கு மட்டும் கடவுள் அனுக்கிரகம் இருக்குறதா சொன்னாங்க. எல்லோருக்கும் கடவுள் அனுக்கிரகம் இருக்குது. அது கூடவோ குறைச்சலாவோ இருக்குது. அவ்வளவுதான். நான் செஞ்ச புண்ணியம் எனக்கு இன்னமும் பாடக்கூடிய சக்தி இருக்குது. ஆசீர்வாதம் இருக்குது.

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நான்கு சுவற்றுக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா? நாம கைதியாகத்தான் இருக்குறோம். வேற வழியில்ல. தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான் . இப்ப உலகம் வேறல்ல தாயும் வேறல்ல என்றுதான் நினைக்கப்போகிறோம்.
உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம். உலகம் எல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம். அதுதான் எங்களது முக்கியமான கொள்கை. இந்தப்பாட்டை இவ்வளவு அழகாக எழுதிய புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கும், இந்தப்பாடலை இவ்வளவு அழகாக இசையமைத்திருக்கும் மரகதமணி அவர்களுக்கும் நன்றி.

’’நான் செஞ்ச புண்ணியம்; நமக்கு அது சாபம்’’ -கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் நெகிழவைக்கும் பேச்சு

எனக்கு இதுமாதிரி ரத்தினங்களும், மாணிக்கங்களும், வைடூரியங்களும் மாதிரியான பாடுக்கள் கொடுத்த எல்லா இசையமைப்பாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், புரடியூசர்களுக்கும், டைரக்டரக்ளுக்கும் கேட்கிற உங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்குகிறேன். எல்லோரும் செழித்திருக்கணும். நன்றாக இருக்கணும்’’என்று அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசியிருக்கும் வார்த்தைகள், அவரது இசை ரசிகர்களின் மனதை பிசைகிறது .