4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் :முதல்வர் பழனிசாமி

 

4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன்  :முதல்வர் பழனிசாமி

நாட்டின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டையில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார்.

4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன்  :முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் கோட்டையில் கொடியேற்றிய பின்னர் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, ” 4வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமையடைகிறேன். சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 16,000 ஆயிரத்திலிருந்து ரூபாய் 17,000 ஆக உயர்த்தப்படும். வீரர்கள் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வு ஊதியம் சிறப்பு ஊதியம் ரூ. 8 ஆயிரத்திலிருந்து 8,500 ஆக உயர்த்தப்படும். தமிழகத்தில் தான் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. தமிழக அரசு நிதி ஆதாரத்தை கொண்டு கொரோனா தடுப்பு பணிக்கு 6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று கூறிய அவர், “சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும் என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ 300 கோடியில் திட்டம், பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்த மகளிர் குழுவிற்கு சுழல்நிதி மற்றும் கடன் வழங்கப்படும். உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உடுமலைபேட்டையில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் கொண்டுவரப்படும்.

குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ 7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கபடும். கொரோனா காலத்திலும் பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று கூறிய அவர் பொருளாதாரத்தில் தமிழகம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.