‘’என் உடல்நிலை நன்றாக இருக்கிறது..’’ அமித்ஷா

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’ என் உடல்நிலை நன்றாக இருக்கிறது. ஆனாலும், நான் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன்.  ஆகவே, கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.  சாமானியர்கள் முதல் அதிகாரம் படைத்தவர்கள் வரை அனைவரையும் விட்டுவைக்கவில்லை கொரோனா தொற்று. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி, கொரோனா மீதான அச்சத்தை மக்களிடையே அதிகப்படுத்துகிறது.

Most Popular

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொலையில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை திடீர் மரணம்!

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு...

கேஸை திறந்துவிட்டு மகள்களை கொல்ல முயன்ற தந்தை… கதறிய மனைவி பூட்டை உடைத்து காப்பாற்றிய போலீஸ்

புகார் கொடுத்ததால் மனைவி மீதான கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிள்ளைகளை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை...

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் இன்னும் அந்த கட்சிக்கு முழு நேர புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும்...