“நானு தமிழ் மொழியின் பெரிய அபிமானி” – கொஞ்சும் தமிழில் பேசிய பிரதமர் மோடி!

 

“நானு தமிழ் மொழியின் பெரிய அபிமானி” – கொஞ்சும் தமிழில் பேசிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும், அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிவருகிறார். இன்று நிகழ்ச்சியின் 78ஆவது தொடரில் பிரதமர் மோடி பேசினார். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ் மொழி குறித்து அவர் பேசாமல் இருக்க மாட்டார். அதேபோல இன்றும் பேசினார். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தது.

“நானு தமிழ் மொழியின் பெரிய அபிமானி” – கொஞ்சும் தமிழில் பேசிய பிரதமர் மோடி!

சென்னையைச் சேர்ந்த குருபிரசாத் என்பவர், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “உங்களின் மனதின் குரல் நிகழ்ச்சியைத் தவறாமல் கேட்பேன். அப்போது நீங்கள் தமிழ்நாடு குறித்துப் பேசும்போது மிகவும் உற்சாகமடைந்து விடுவேன். தமிழ் மொழி குறித்தும் தமிழர்கள் கலாச்சாரம், திருவிழாக்கள் குறித்தும் பேசுகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்தக் கடிதம் குறித்து இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் விவரித்த மோடி அதற்குப் பதிலளித்தார்.

“நானு தமிழ் மொழியின் பெரிய அபிமானி” – கொஞ்சும் தமிழில் பேசிய பிரதமர் மோடி!

அப்போது பேசிய அவர், “குரு பிரசாத் அவர்களே நான் நிறைய தடவை தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளைப் போற்றி பேசியிருக்கிறேன். திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்களுடைய கடிதத்தைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன்” என்றார். இதற்குப் பிறகு தனது கொஞ்சும் தமிழில் பேசிய மோடி, “நானு தமிழ் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி. உலகத்திலேயே பழமையான மொழியான தமிழின் பெரிய அபிமானி. என்னுடைய தமிழ் உச்சரிப்பில் சிறு சிறு குறைகள் இருக்கலாம். அதைக் கற்றுக்கொள்ள என்னுடைய முயற்சியும் தமிழ் மீதான அன்பும் என்றுமே குறையாது” என்றார்.