‘கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத அமைச்சர்’ : தேதியில் திடீர் மாற்றம்!

 

‘கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத அமைச்சர்’ : தேதியில் திடீர் மாற்றம்!

ஒரு மருத்துவராக நாளை மறுநாள் தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள உள்ளேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத அமைச்சர்’ : தேதியில் திடீர் மாற்றம்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் கூட ஓய்ந்த பாடில்லை. ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் மருந்து கண்டுபிடிக்காததால் பல உயிர்கள் பலியாகின. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கடந்த 16 ஆம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்களை தொடர்ந்து முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

‘கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத அமைச்சர்’ : தேதியில் திடீர் மாற்றம்!

இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே 5.56 லட்சம் தடுப்பூசிகள் வந்த நிலையில் மேலும் 5.08 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த சூழலில் ஒரு மருத்துவராக நாளை மறுநாள் தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள உள்ளேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார் என அறிவித்திருந்த நிலையில் அவசர பணியின் காரணமாக அமைச்சர் புதுக்கோட்டை செல்வதால் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.