“நான் திமுகவை சேர்ந்தவன்” – ஹைகோர்ட்டில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் முறையீடு!

 

“நான் திமுகவை சேர்ந்தவன்” – ஹைகோர்ட்டில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் முறையீடு!

2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம். எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

“நான் திமுகவை சேர்ந்தவன்” – ஹைகோர்ட்டில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் முறையீடு!

இந்த வழக்கில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது தான் ஒரு திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் என குறிப்பிடவில்லை. என்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொது நல வழக்கு தொடர முடியாது என்பதால் எனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் திமுகவை சேர்ந்தவன்” – ஹைகோர்ட்டில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் முறையீடு!

முன்னதாக இந்த வழக்கில் ஈரோடு எம்பி கணேச மூர்த்தி, தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது வழக்கமான நடைமுறை தான். இன்னொரு கட்சி சின்னத்தில் வேறு கட்சியினர் போட்டியிட முடியாது. ஆகவே வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக சொந்த கட்சியை விட்டு விலகி போட்டியிடும் சின்னம் கொண்ட கட்சியில் இணைவார்கள். அதற்குப் பின்பே அவர்கள் போட்டியிட முடியும். அவர்கள் சின்னம் கொண்ட (திமுக) கட்சி எம்பியாகவே கருதப்படுவார்கள்.