”நாங்க தோற்றாலும் நடராஜனைப் பாராட்டுகிறேன்” வியக்க வைக்கும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்

”நாங்க தோற்றாலும் நடராஜனைப் பாராட்டுகிறேன்” வியக்க வைக்கும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதில் ஒருநாள் தொடரை இந்தியா இழந்தாலும், மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றிருந்தது. அதற்கு முக்கியக் காரணம், தமிழக வீரர் நடராஜன் எடுத்த 3 விக்கெட்டுகள்.

அடுத்து, டி20 தொடர் நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியா வென்றது. இரு போட்டிகளிலும் நடராஜன் தலா இரு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

”நாங்க தோற்றாலும் நடராஜனைப் பாராட்டுகிறேன்” வியக்க வைக்கும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்

மூன்றாம் போட்டியில் இந்தியா தோற்றிருந்தாலும், தொடரை வென்றிருந்ததால் சந்தோஷக் கொண்டாட்டம் நீடித்தது. தொடர்நாயகன் விருதை வென்ற ஹிர்திக், ‘இது உனக்குத்தான்’ என்று நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார். ஓரமாக ஒதுங்கி நின்ற நடராஜன் கையில் தொடர் கோப்பையைக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார் கேப்டன் கோலி.

இந்தியாவே குறிப்பாக தமிழகமே கொண்டாடி வருகிறது நடராஜனை. அதன் இன்னுமொரு சிறப்பாக ஆஸ்திரேலிய வீரர் ஒருவரே நடராஜனைப் பாராட்டியிருப்பது ஆச்சர்யம் தருகிறது.

”நாங்க தோற்றாலும் நடராஜனைப் பாராட்டுகிறேன்” வியக்க வைக்கும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்

ஐபிஎல் அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டீமில் இருப்பவர் நடராஜன். அதன் கேப்டன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். அதனால், நடராஜன் மீது நல்ல அபிப்பிராயம் உண்டு. இந்திய அணிக்கு அவர் தேர்வாகியிருந்தபோதே ‘ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்’ என வரவேற்றிருந்தார் வார்னர்.

இப்போது டி20 தொடரை ஆஸ்திரேலியா தோற்றிருந்தாலும், அவர் நடராஜனை வாழ்த்தியிருக்கிறார். வார்னே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”வெற்றி தோல்விக்கு அப்பாலும் மைதானத்திலும் தனிப்பட்ட முறையிலும் ஒருவருக்கு ஒருவர் மதிப்பு கொடுத்துக்கொள்கிறோம். டி20 தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டை ரொம்பவும் நேசிப்பவர் நடராஜன். நல்ல மனிதரும்கூட. நெட் பவுலராக உள்ளே வந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெற்றது எளிதான ஒன்றல்ல. வெல்டன் நடராஜன்” என்று குறிப்பிட்டுள்ளார் டேவிட் வார்னர்.

”நாங்க தோற்றாலும் நடராஜனைப் பாராட்டுகிறேன்” வியக்க வைக்கும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்

தம் அணி, தம் நாடு, தம் மாநிலம் என்று புகழ்பெறுவதே பெரிய விஷயம். தோற்கடித்த அணியிலிருந்து வாழ்த்து கிடைப்பது அரிய விஷயம். அதை நடராஜன் சாதித்திருக்கிறார்.