நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை ஏற்கிறேன் – நடிகர் சூர்யா ட்வீட் !

 

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை ஏற்கிறேன் – நடிகர் சூர்யா ட்வீட் !

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நீட் தொடர்பான தனது எதிர்ப்பை கடுமையான விமர்சனங்களுடன் பதிவு செய்த நடிகர் சூர்யா, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் மாணவர்களை அச்சமின்றி தேர்வு எழுத அறிவுறுத்துகிறது என்றார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார்.

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை ஏற்கிறேன் – நடிகர் சூர்யா ட்வீட் !

ஆனால் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என 6 முன்னாள் நீதிபதிகள் கோரிக்கை விடுக்க, சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது. மேலும் பொது விவகாரம் குறித்து பேசும் போது கவனம் தேவை. நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்க கூடாது. விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லை மீற கூடாது என்றும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தந்துள்ளது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.