”அக்டோபரில் ஹூண்டாய் – ஹீரோ கலக்கல்… விற்பனையில் புதிய மைல்கல்” !

 

”அக்டோபரில் ஹூண்டாய் – ஹீரோ கலக்கல்… விற்பனையில் புதிய மைல்கல்” !

கடந்த அக்டோபரில் பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள், சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளன. குறிப்பாக ஹூண்டாய் மற்றும் ஹீரோ நிறுவனங்கள் முன்எப்போதும் இல்லாத சிறப்பான விற்பனை உயர்வை அக்டோபரில் பெற்றுள்ளது.

”அக்டோபரில் ஹூண்டாய் – ஹீரோ கலக்கல்… விற்பனையில் புதிய மைல்கல்” !

கொரோனோ தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையில் கடும் வீழ்ச்சியை கண்டன. பின்னர் படிப்படியாக பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சந்தையில் இயல்பு நிலை திரும்பி வருகின்றன. இந்நிலையில் பண்டிகை கால விற்பனை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் விற்பனை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், முன் எப்போதும் இல்லாத மாதாந்திர விற்பனையை ஹூண்டாய் மற்றும் ஹீரோ நிறுவனங்கள் பெற்றுள்ளன.

”அக்டோபரில் ஹூண்டாய் – ஹீரோ கலக்கல்… விற்பனையில் புதிய மைல்கல்” !

கடந்த அக்டோபரில் மட்டும் 56, 605 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளதாக ஹீண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 13.2 சதவீத வளர்ச்சி என தெரிகிறது. கடந்த 2019 அக்டோபரில் ஹூண்டாய் மொத்தம் 50,010 கார்களை விற்பனை செய்திருந்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு கார் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் ஏற்றுமதி அக்டோபரில் 12,230 என்றளவில் 10.1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டார்ஸ், நிறுவனம் தொடங்கியதில் இருந்து இதுவரை காணாத விற்பனையை கடந்த அக்டோபரில் கண்டுள்ளதாக .தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் மட்டும் 8 லட்சத்து 6,848 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், 5 லட்சத்து 99 ஆயிரத்து 248 டூவீலர்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2020 அக்டோபரில் விற்பனை 35 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்