ஸ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹுண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்!

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹுண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் இருங்காட்டுக்கோட்டையில் கார்கள் உற்பத்தி செய்யும் ஹுண்டாய் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்ததை போன்று இந்த தொழிற்சாலையும் மூடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, இந்த தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கியது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹுண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்!

இந்நிலையில் ஹுண்டாய் தொழிற்சாலை வரும் 19 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் தொழிற்சாலையில் இருக்கும் நூற்றுக்கணக்கான ரோபோக்கள், இயந்திரங்களை மேம்படுத்தும் பொருட்டு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும். அதே போல இந்த ஆண்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, அதிக செயல்திறன் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு புது ரக கார்களை உருவாக்குவதற்காக 19 ஆம் தேதி வரை தொழிற்சாலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.