Home உலகம் கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா: கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மலேரியா நோய்க்கான பிரதான தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு கொரோனாவுக்கு இந்த மாத்திரையை பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது. பின்னர் கடந்த வாரம் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

HCQ

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையில் வழங்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய சோதனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த மாத்திரை கொரோனா நோய்த் தொற்றில் இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகவே கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Most Popular

”தென்கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயனத்துக்கு கூடுதல் வரி?”

தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயன பொருள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தலீக்குநீரிலி (phthalic anhydride)எனப்படும்...

போலீஸ் துரத்தியபோது ஆற்றில் விழுந்து மீனவர் இறந்த சம்பவம்: தாழங்குடாவில் தொடரும் பதற்றம் -போலீஸ் குவிப்பு

போலீசார் துரத்தியதால் ஆற்றில் விழுந்து இறந்த மீனவரின் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதாலும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராகுல்காந்தி மீது உ.பி போலீசார் தாக்குதல் ? பரபரப்பு புகைப்படங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் என்ற இடத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்முறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயர்சாதி...

தலைவர் பதவியிலிருந்து தூக்கப்படும் கே.எஸ் அழகிரி! அடுத்த தலைவர் இவர் தான்- கராத்தே தியாகராஜன் அதிரடி

கொரோனா காலம் என்பதால் ரஜினி பொறுத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93...
Do NOT follow this link or you will be banned from the site!