ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த மீண்டும் அனுமதி – உலக சுகாதார அமைப்பு

 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த மீண்டும் அனுமதி – உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் தற்காலிக தடை விதித்தது. அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையில் இந்த மாத்திரை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த மாத்திரை முக்கியமாக மலேரியா நோய்க்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த வாரம் தி லான்செட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவு வெளியீட்டிற்கு பிறகு இந்த மருந்தை கொரோனா சிகிச்சை உட்பட எந்த சிகிச்சைக்கும் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த மீண்டும் அனுமதி – உலக சுகாதார அமைப்பு

கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் அவர்கள் இறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்பு தரவுகளை ஆராய்ந்து கண்காணித்த பிறகே மீண்டும் பயன்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதனை தெரிவித்துள்ளார்.