வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக ஒவைசி, பாண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு..

 

வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக ஒவைசி, பாண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு..

அக்பருதீன் ஓவைசி மற்றும் பாண்டி சஞ்சய் குமார் ஆகியோர் மீது ஹைதராபாத் போலீசார் வெறுக்கத்தக்க பேச்சு பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இது மாநகராட்சி தேர்தல் என்றாலும், அரசியல் கட்சிகள் அனைத்தும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வது போல் செய்து வருகின்றன. மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ்., பா.ஜ.க. மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக ஒவைசி, பாண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு..
பாண்டி சஞ்சய் குமார்

அரசியல் கட்சிகளும் அனைத்தும் மற்ற கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகின்றன. தற்போது வெறுக்கத்த பேச்சு பேசியதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் தெலங்கான பா.ஜ.க. தலைவர் பாண்டி சஞ்சய் குமார் மீது போலீசார் தாமாக முன்வந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.ஆர். நகர் போலீசார் இது தொடர்பாக அறிக்கை ஒன்றில், வெறுக்கத்தக்க பேச்சுக்காக அக்பருதீன் ஓவைசி, பாண்டி சஞ்சய் குமார் மீது தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு இந்திய தண்டனை சட்டத்தின் தொடர்புடை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக ஒவைசி, பாண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு..
ஹைதராபாத் போலீசார்

அக்பருதீன் ஓவைசி ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது, பி.வி. நரசிம்ம ராவ், என்.டி. ராமராவ் ஆகியோரின் நினைவிடங்கள் ஆக்கிரமிப்பு என்றும் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பாண்டி சஞ்சய் குமார் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற உடன் பழைய நகரில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருக்கும் ரோஹிங்கியர்கள் களையெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.