• February
    19
    Wednesday

Main Area

Main



செல்போனை காப்பாற்றப்போய், ரயிலிலிருந்து விழுந்து துண்டாகிப்போன இளம்பெண்!

Hyderabad Suburban train
Hyderabad Suburban train

ஐதராபாத், பேகம்பேட் ரயில் நிலையம் அருகில் வந்துகொண்டிருக்கிறது புறநகர் ரயில் ஒன்று. ஏறும் வழிக்கு அருகில் வந்து நின்றுகொண்டால், கூட்டத்தில் இறங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று, கதவுக்கு பக்கத்தில் வந்து நிற்கிறார் 22 வயது இளம்பெண் ஒருவர். கையில் செல்போன், படிக்கட்டுக்கு அருகில் நிற்கிறார். வளைவு ஒன்றில் திடீரென ரயிலின் வேகத்தில் தடுமாறியவர் கையில் இருந்த செல்போன் கீழே விழுந்துவிடுகிறது. செல்போன் கீழே விழுவதற்குள் அதனை எடுத்துவிடவேண்டும் என்று அவசரத்தில் கீழே குனிந்தவர், நிலை தடுமாறி வெளியே விழுகிறார். பிறகு நடந்ததை எழுதுவதும், அதனை படிப்பதும் கொடுமையிலும் கொடுமை.

Ashwini

அஷ்வினி என்ற அந்த 22 வயது பெண், தினமும் வேலைக்காக புறநகர் பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். எப்பொழுதாவது ஒருமுறை ரயிலில் பயணம் செய்பவர்களைக் காட்டிலும், தினமும் அல்லது அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஒரு வித அசாத்திய துணிச்சலும், சீனியாரிட்டியும் தென்படும் அல்லவா? அந்த துணிச்சல் அஷ்வினியின் வாழ்க்கையையே முடித்துவிட்டது. படிக்கட்டில் பயணம் நொடியில் மரணம் என எத்தனை விழிப்புணர்வை வாசகங்களை அஷ்வினி கடந்து வந்திருப்பார்? எதுவுமே பயனளிக்கவில்லை. அவரின் உடல் துண்டாகிப்போனதுபோல், அவரின் பெற்றோர் கனவும், இத்தனை வருட பாசமும் துண்டு துண்டாய் நொறுங்கிப்போய்விட்டதே!

2018 TopTamilNews. All rights reserved.