அமித் ஷா, ஜே.பி. நட்டா பிரச்சாரம் செய்தும் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக!

அமித் ஷா, ஜே.பி. நட்டா பிரச்சாரம் செய்தும் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக!

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் 74.67 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் டிஆர்எஸ் 150 ,பாஜக 149, காங்கிரஸ் 146 ,தெலுங்குதேசம் 106 , ஓவைசியில் AIMIM 51 இடங்களில் போட்டியிட்டன.

அமித் ஷா, ஜே.பி. நட்டா பிரச்சாரம் செய்தும் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக!

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 150 வார்டுகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 55, பாஜக 48, ஓவைசி கட்சி 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அமித் ஷா, ஜே.பி. நட்டா பிரச்சாரம் செய்தும் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக!

அமித் ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் பரப்புரை செய்த நிலையில் பாஜக இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று சரிவை சந்தித்துள்ளது. ஹைதராபாத் மாநகராட்சியின் 136 வது வார்டு நீரட்மெட் பகுதியில் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.