ஹைதராபாத் முதலில் பேட்டிங் – அஸ்வின் ஆடவில்லை #IPL

 

ஹைதராபாத் முதலில் பேட்டிங் – அஸ்வின் ஆடவில்லை #IPL

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பல கடைசி பந்து வரை சுவாரஸ்யமானதாக மாறி வருகிறது. நேற்று மும்பை இண்டியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியும் அப்படித்தான் ஆனது. இரு அணிகளும் 201 ரன்களை எடுக்க, சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வென்றது.

ஹைதராபாத் முதலில் பேட்டிங் - அஸ்வின் ஆடவில்லை #IPL

இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இரண்டு வெற்றிகளோடு டெல்லியும் இரண்டு தோல்விகளோடு ஹைதராபாத் டீமும் இன்று மோதுகின்றன.

ஹைதராபாத் முதலில் பேட்டிங் - அஸ்வின் ஆடவில்லை #IPL

இன்று டாஸ் வின் பண்ணிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். அதனால், பேட்டிங் செய்ய ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னரும் பேர்ஸ்ட்டோவும் ஓப்பனிங் இறங்குகின்றனர்.

முதல் போட்டியில் காயம் அடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தப் போட்டியிலும் ஆடவில்லை. அவர் இல்லாதது டெல்லிக்குப் பெரும் பின்னடைவே.