இளைஞருடன் உல்லாசம்… நேரில் பார்த்த கணவன்!- அதிகாலையில் மனைவிக்கு நடந்த கொடுமை

 

இளைஞருடன் உல்லாசம்… நேரில் பார்த்த கணவன்!- அதிகாலையில் மனைவிக்கு நடந்த கொடுமை

மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த மனைவி, இளைஞருடன் அதிகாலையில் உல்லாசமாக இருப்பதை பார்த்த கணவன், மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் வசித்து வந்த நீலாபதி (42) தனது மகனுடன் (19) தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். மூன்று ஆண்களுக்கு முன்பு கணவன் பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் நீலாவதி தனது வீட்டில் காயங்களுடன் நேற்று சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் மின் விளக்குள் எரிந்து கொண்டிருந்தது. தாயுடன் இருந்த மகனை காணவில்லை. இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. மகனை பிடித்து காவல்துறையினர் விசாரித்ததில், அம்மா கொல்லப்பட்ட அன்று நான் வீட்டில் இல்லை. எனது தந்தை மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, நீலாவதியின் கணவரான ராமதாஸை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது மனைவி நீலாவதி அந்த பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகி வந்ததை நேரில் பார்த்தேன். அப்போது, அவளை கண்டித்ததோடு, பிரிந்து சென்றுவிட்டேன். 3 ஆண்டுகளாக பிரிந்து வாழும் நான் விவாகரத்து செய்யவில்லை.

என் மீது சந்தேகப்பட்டு உங்கள் அப்பா என்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி மகனை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டாள். இருந்தாலும் மகன் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருந்தான். நேற்று முன்தினம் அதிகாலை எனது மரக்கடைக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது, மனைவி தங்கி இருந்த வீட்டின் வழியாக சென்றபோது வீட்டின் படுக்கை அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது இளைஞருடன் நீலாவதி உல்லாசமாக இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தேன். அப்போது, இரண்டு பேரையும் கடுமையாக தாக்கினேன். அடி தாங்க முடியாமல் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடிவிட்டான். மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தேன். இந்த கொலை தொடர்பாக எனது மகனை காவல்துறையினர் தேடுவதாக அறிந்து சரணடைந்தேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து, ராமதாஸை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.