• February
    24
    Monday

Main Area

Main



ஆத்திரத்தில் மனைவிக்கு மொட்டையடித்த கணவன்! 14 வருஷம் ஜெயில் தண்டனை!

Shaved rage
Shaved rage

ஒரு நிமிஷ கோபம் தான்... நம்மளோட வாழ்க்கையை சூறாவளி காற்றாய் திசை மாற்றி போட்டு விடுகிறது. அப்படி ஆத்திரத்தில் ஒருத்தர் செஞ்ச காரியம், அவருடைய குடும்ப வாழ்க்கையையும் சுழற்றிப்போட்டு 14 வருஷ ஜெயில் தண்டனையையும் வாங்கிக் கொடுக்குற நிலைமைக்கு கொண்டு போயிடுச்சு! இப்போ காப்பாற்றச் சொல்லி அவருடைய மனைவியிடம் மனுஷன் கெஞ்சிக்கிட்டு இருக்காரு!

Husband and wife


வங்கதேசத்தில் ஜாய்பூர்ஹட் மாவட்டத்தில் வசித்து வருபவர் பப்லு மொண்டல். செல்லமா பப்லு. மனுஷனுக்கு கோபம் எப்பவுமே மூக்கு மேலே தான் இருக்கும். அவர் வீட்டில் இருக்கும் போது எந்த சத்தமுமே வரக்கூடாது. சத்தம்னா... சிரிப்பு சப்தம், சீரியல் சப்தம்னு எதுவுமே வரக்கூடாது. அவர் உட்கார்ந்திருக்கும் போது மனைவி எதிரில் நின்னுக்கிட்டு தான் பேசனும். ஒரு நாள் காலைல மனுஷன் ஆசையாசையாய் அவருக்குப் பிடிச்ச மெனு எல்லாம் சொல்லி சமைக்கச் சொல்லிட்டு குளிச்சு முடிச்சு சாப்பிட உட்கார்ந்தார்.

Man shouting

முதல் வாய் எடுத்து வெச்சதுமே சாப்பாட்டில் இருந்த முடி பப்லு வாய்ல சிக்கியிருக்கு. சும்மா சலங்கைக் கட்டி ஆடுற மனுஷனுக்கு வாய்ல வசமா சிக்கிட்டா வுடுவாறா..? அதன்பிறகு பப்லு செய்தது தான் அதிர்ச்சியை கிளப்பும் பகீர் ரகம். சுறுசுறுப்பாக சாப்பாட்டை எல்லாம் எடுத்து ஓரமாய் வெச்சுட்டு ஒரு ப்ளேட் எடுத்து, அடர்த்தியா அழகா தலைமுடியைப் வெச்சிருந்த மனைவிக்கு நல்லா வழு வழுன்னு மொட்டை போட்டுட்டார்.  அக்கம்பக்கத்தினர் எல்லாம் பப்லு மனைவிக்கிட்டே முடி பராமரிப்பது பற்றி டிப்ஸ் கேட்டு, அவங்களுக்கு வளர்க்க ஆரம்பிச்சாங்க. இந்நிலையில், பப்லு செய்த வேலை அவங்களுக்கும் அதிர்ச்சியைக் கிளப்பியது. உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

Shaved


உடனடியே சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், பப்லுவை கைது செய்தனர். பப்லு மீது காவல்துறையினர் கடுமையான காயத்தை ஏற்படுத்திய பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 14 ஆண்டுகள் வரை பப்லுவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். விதி எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க!

2018 TopTamilNews. All rights reserved.