ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து திரும்பிய கணவர்: கொரோனா அச்சத்தால் வீட்டுக்குள் சேர்க்காத மனைவி!

குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்தார்.

திருச்சி துவாக்குடி மலை, மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் பாவா. இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்தார்.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளியேறி நிர்கதியாக தெருவில் நின்றுள்ளார். இதை கண்ட சில சமூக ஆர்வலர்கள் சிலர் பாவாவிடம் அவரின் முகவரியை கேட்டு தெரிந்துக்கொண்டு அவரை வீட்டில் ஒப்படைத்தனர்.

ஆனால் அவரின் மனைவியோ, முன்பை விட பாவாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்து உள்ளதை பார்த்து அவருக்கு கொரோனா இருக்குமோ என்று நினைத்து அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனால் இரவு 12 மணிவரை வாசலில் அமர்ந்து கொண்டிருந்தவரை பார்த்து பரிதாபாப்பட்ட அப்பகுதிவாசிகள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அவரை அரசு மறுத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

கடந்த மே மாதம் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூன் 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு...

ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே நன்கொடையாக ரூ.41 கோடி குவிந்தது..

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 நவம்பர் 9ம் தேதியன்று அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டி கொள்ள அனுமதி அளித்தது. மேலும் ராமர் கோயில் கட்டுமான...

லாக்டவுனால் அதானி பவர் நிறுவனத்தின் நஷ்டம் எகிறியது..

இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்று அதானி பவர். இந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.682.46 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. இது...