ரூ.15 லட்சம் கொடுத்து கூலிப்படையை வைத்து கணவனை வெட்டி கொன்ற மனைவி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

நகைகள் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்

தஞ்சையை சேர்ந்தவர் ஜோசப் என்கின்ற யூசுப். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி திருச்சியில் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில் குவைத்துக்கு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு தன்னுடன் பணிபுரிந்த இலங்கையை சேர்ந்த அசிலா என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்து தஞ்சையில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார். இதையடுத்து திருச்சியில் ஒரு மனைவி, தஞ்சையில் ஒரு மனைவி என யூசுப் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அசிலாவை யூசுப் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி யூசுப் சென்ற காரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்த போலீசாருக்கு தீனி போடும் வகையில் ஐந்து வழக்கறிஞர்களுடன் காவல்நிலையத்தில் ஆஜரான யூசுப்பின் மனைவி அசிலா கணவன் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதாடினார். இருப்பினும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

2016 ஆம் ஆண்டில் யூசுப் மீண்டும் வெளிநாடு செல்ல தஞ்சையில் தங்கிய அவரது மனைவி அசிலா முகநூல் மூலம் பல இளைஞர்கள் உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும் யூசுப் வங்கி கணக்கு வைத்திருந்த வங்கியின் மேலாளரை தனது வலையில் வீழ்த்திய அசிலா யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த 300 சவரன் தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்.

 

இந்த தகவல் யூசுப்புக்கு நண்பர்கள் மூலம் தெரிய வரவே அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தஞ்சை திரும்பிய நிலையில் அசிலாவிற்கு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அவரைப் பிரிந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து 2019ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் யூசுப். மேலும் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீட்கவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அசிலா அபகரித்த பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் தன்னைவிட்டு பறிபோய் விடுமோ என்ற பயத்தில் கணவரை தனது ஆண் நண்பர்கள் உதவியுடன் ரூபாய் 15 லட்சம் கொடுத்து திருச்சியிலிருந்து கூலிப்படையை வரவழைத்து வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.


இந்த வழக்கில் அசிலா, கூலிப்படையைச் சேர்ந்த சகாதேவன், பிரகாஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..

தான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம்...

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் விதமாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், அரங்கங்கள் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை...

கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம்...
Open

ttn

Close