செல்போனை தர மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!

மனைவி மீது சந்தேகப்பட்ட நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

அப்துல் சமது (32) என்பவர் திருப்பூரில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிஷா பானு (26). இவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்துல் சமதுவை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருப்பூர், காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியில் வசித்து வருகின்றனர்.
திருமணத்திற்குப் பின்பும் நிஷா பானு தனது நண்பர்களுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் நிஷா மீது சமதுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சமது நிஷாவைத் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்.


இந்நிலையில், நேற்று இரவு அப்துல் சமது வீட்டிற்கு வந்த போது நிஷா பானு செல்போனில் வேறு ஒருவருடன் பேசியிருந்துள்ளார். ஆத்திரமடைந்த சமது அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் நிஷா பானுவிடமிருந்து செல்போனைப் பறிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் நிஷா அவர் செல்போனைத் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமது அருகில் இருந்த குக்கரை எடுத்து நிஷாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் கீழே சுருண்டு விழுந்துள்ள நிஷா பானுவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார் சமது. பின்னர் அப்துல் சமது தாமாகவே, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், நிஷா பானுவின் உடலைக் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்துல் சமது மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..

தான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம்...

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் விதமாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், அரங்கங்கள் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை...

கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம்...
Open

ttn

Close