முதலிரவில் மனைவியை கொன்றுவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் சோமஞ்சேரி சேர்ந்த நீதிவாசன் என்பவருக்கும் சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடந்துள்ளது. பெற்றோர் சம்மதத்துடனே அவர்களின் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு முதலிரவு அறையில் இருந்து ஸ்ரீனிவாசன் வேகமாக வெளியே ஓடி வந்துள்ளார். அதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், அந்த அறைக்குள் சென்று பார்த்த போது சந்தியா கடப்பாரையால் தாக்கப்பட்டு கழுத்தை அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்று சந்தியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தலைமறைவான நீதிவாசனை தேடி வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் வேப்பமரத்தில் தூக்கில் தூங்கிய நிலையில், நீதிவாசன் சடலமாக இருந்துள்ளார். இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக, சந்தியாவை ஏன் நீதிவாசன் கொலை செய்தார்? அவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? போன்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Most Popular

50 வயது நபர் கொரோனாவால் தேனி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. தேனி...

திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரேநாளில் 3 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...

கன்னியாகுமரியில் மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...

சென்னையில் 24 வயது இளைஞர் கொரோனாவால் பலி : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணிநேரங்களில் நேர்ந்த பரிதாபம்!

Open

ttn

Close