Home க்ரைம் வேறு ஒருவருடன் செல்போனில் பேச்சு : மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

வேறு ஒருவருடன் செல்போனில் பேச்சு : மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

திருச்சி அருகே குழந்தைகள் கண்முன்னே மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் தில்லைநகர் செங்குளத்தான் பகுதியில் வசித்து வருபவர் தவசீலன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். ராஜேஸ்வரி அடிக்கடி வேறு ஒரு நபரிடம் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தவசீலன், அவரை கண்டித்திருக்கிறார். மேலும் மன்னார்குடியில் தனது தாய் வீட்டிற்கு வருமாறு ராஜேஸ்வரியை அழைத்திருக்கிறார்.

அதற்கு ராஜேஸ்வரி மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. நேற்று இரவும் இவர்களுக்கு இடையே சண்டை வந்த நிலையில், ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை ராஜேஸ்வரி வீட்டில் இருந்து அதிக அளவில் பாடல் சத்தம் கேட்டுள்ளது. மேலும் வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த சகுந்தலா, கதவை திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது தொடர்பாக சகுந்தலா போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ராஜேஸ்வரியின் மகனிடம் நடத்திய விசாரணையில், தவசீலன் ராஜேஸ்வரியை கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் தலைமறைவான தவசீலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...

ஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...

அதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...
TopTamilNews