பெண் குழந்தை பிறந்ததால் போனில் முத்தலாக் சொன்ன கணவன்! காவல் நிலையம் சென்ற பெண் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    19
    Wednesday

Main Area

Mainபெண் குழந்தை பிறந்ததால் போனில் முத்தலாக் சொன்ன கணவன்! காவல் நிலையம் சென்ற பெண்

முத்தலாக் விவகாரம்
முத்தலாக் விவகாரம்

இஸ்லாமிய பெண்களை 3 முறை தலாக் கூறி கணவர் விவகாரத்து செய்யும் நடைமுறையை தடை செய்யும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதாவை கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதனையடுத்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு அந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மேலும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யலாம்.

முத்தலாக் நடைமுறை நிறுத்தம்

இந்த புதிய சட்டத்தால் முத்தலாக் நடைமுறை தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது இன்னும் தொடரத்தான் செய்கிறது. உத்தர பிரதேசத்தில் சம்பல் பகுதியை பெண் ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் தனது கணவர் போனில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:

முத்தலாக் தடை

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் எனது கணவர் கமீலை திருமணம் செய்தேன். எனக்கு நான்கு பெண் குழந்தைகள். இந்நிலையில் கடந்த 11ம் தேதி பெண் குழந்தை பெற்றெடுத்தேன். இந்த தகவலை அறிந்த எனது கணவர் போனில் எனக்கு முத்தலாக் கூறி விவகாரத்து செய்தார். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார். பெண் புகாரை வழக்காக பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.