சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்யும் மனைவி… கூகுள் மேப் மீது புகார் கொடுத்த கணவர் !

இதுகுறித்து உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்திவருகிறார். சந்திரசேகரின் மனைவி அவர் மீது சந்தேகம் கொண்டு தினமும் அவர் செல்போனில் உள்ள கூகுள் மேப் யுவர் டைம் லைனை தினமும் சோதனை செய்து வந்துள்ளார்.

இதில் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்கு எல்லாம் அவர் போய் வந்ததாக கூகுள் மேப் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தினமும் சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் அவர் மட்டுமின்றி, அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார். நேற்றுமுன்தினம் கூட அவர் செல்லாத இடங்களுக்கு சென்றுவந்ததாக காட்டியதால் சந்தேகப்பட்டு, கணவரும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் சந்திரசேகரன் கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, தான் செல்லாத இடங்களை மேப்பில் காண்பித்து மன உளைச்சலை தருவதாக அந்த மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், நீதி வழங்கவும், நஷ்ட ஈடு கோரியும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...