வரதட்சணை டார்ச்சர்… உயிரோடு எரித்த கணவன்… 8 நாட்களுக்கு பின் பிரிந்த மனைவியின் உயிர்!- திருமணமான 2 மாதத்தில் நடந்த கொடுமை

 

வரதட்சணை டார்ச்சர்… உயிரோடு எரித்த கணவன்… 8 நாட்களுக்கு பின் பிரிந்த மனைவியின் உயிர்!- திருமணமான 2 மாதத்தில் நடந்த கொடுமை

வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்து மனைவியை உயிரிரோடு எரித்துக் கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 8 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜலிங்கம் என்பவரின் மகள் ராஜேஸ்வரி (18) திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் வி.பரங்கினி கிராமத்தை சேர்ந்த துரை என்பவரின் மகன் ஜீவாவும் (19) படித்து வந்தார். ஒரே கல்லூரி என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். காதலித்து வந்த இவர்கள், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது குறித்து பெற்றோரிடம் சம்மதம் கேட்ட அவர்களுக்கு பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து இருவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண சில நாட்கள் மட்டுமே நீடித்தது.

வரதட்சணை மீது ஆசை வந்த ஜீவாவுக்கு, மனைவி ராஜேஸ்வரியிடம் உன் பெற்றோர் வீட்டில் இருந்து நகை, பணம் வாங்கி வரும்படி கூறியுள்ளார். இதற்கு ராஜேஸ்வரி சம்மதிக்கவில்லை. இதனால் மனைவியை அடித்து துன்புறுத்தினார் ஜீவா. இது தொடர் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனைவி ராஜேஸ்வரி மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார் ஜீவா. உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் வலி தாங்க முடியாமல் ராஜேஸ்வரி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து ராஜேஸ்வரியின் அண்ணன் முத்துக்குமரன், வானூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், ராஜேஸ்வரி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் பதிவு செய்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் கல்லூரி மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டதால் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.