விடிய விடிய தீபாவளி கொண்டாடிவிட்டு காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி!

 

விடிய விடிய தீபாவளி கொண்டாடிவிட்டு காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி!

திருச்சி கிராப்பட்டியில் சுமதி(64) என்பவரும், அவரது கணவர் மோகன் தாஸ்(70) என்பவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருச்சி கிராப்பட்டி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (70). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், தனது மனைவி சுமதி (64) யுடன் வசித்துவந்தார். இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர். இன்று காலை நேடுநேரமாகியும் கணவன் மனைவி வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இவர்களது மகன் பாலாஜி கதவை தட்டி பார்த்துவிட்டு, பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

விடிய விடிய தீபாவளி கொண்டாடிவிட்டு காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி!

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் சுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும், அவர்படும் வேதனையை பார்த்து சகிக்க முடியாததால் அவரது கணவரும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

மேலும் மோகன் தாஸ் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார். அதில், “தங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. மனைவியை இழந்த பின்பு இந்த பூமியில் வாழ்வதற்கு நான் விரும்பவில்லை. எங்களுடைய மகன் மருமகள், பேத்தி ஆகியோரை பிரிந்து செல்வது கவலையளிக்கிறது. அவர்கள் எங்களை காப்பாற்ற நிறைய செலவு செய்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை குறித்து நடத்தி வருகின்றனர்