ஆய்வாளர் அல்லிராணி்யின் மனிதாபிமானம்! கலெக்டர் செய்த செயலால் போலீசார் நெகிழ்ச்சி!

 

ஆய்வாளர் அல்லிராணி்யின் மனிதாபிமானம்! கலெக்டர் செய்த செயலால் போலீசார் நெகிழ்ச்சி!

கொரோனா அச்சத்தினால் உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் உடலை தொட்டு தூக்க எவரும் முன்வராத நிலையில், தானே தூக்கி ஆட்டோவில் அனுப்பி வைத்த பெண் ஆய்வாளர் அல்லிராணியை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி பாராட்டினார். அப்போது தனக்கு சல்யூட் அடித்த அல்லிராணியை மேடையின் மீது ஏற்றி, கலெக்டர் கீழே நின்று சல்யூட் அடித்து மரியாதை செய்தது போலீசாரையும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் பலரையும் நெகிழச்செய்தது.

ஆய்வாளர் அல்லிராணி்யின் மனிதாபிமானம்! கலெக்டர் செய்த செயலால் போலீசார் நெகிழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள எஸ்.நாவல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி அமாவாசை(35), கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி மாலையில் ஏரிப்பட்டு கிராமத்தில் உள்ள சுதாகரனுக்கு சொந்தமான கரும்பு தோட்டம் வழியாக சென்றபோது, காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலி்யில் சிக்கியதில், மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தெள்ளார் காவல் ஆய்வாளர் அல்லிராணி சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது உயிரிழந்த அமாவாசையின் சடலத்தை ஆட்டோவில் ஏற்றுவதற்காக அங்கிருந்த மக்களை அழைத்தார். ஆனால், கொரொனா அச்சத்தினால் சடலத்தை தொட்டு தூக்கு தயங்கினர். எவரும் முன்வர அச்சப்பட்ட நேரத்தில் கொஞ்சமும் தயங்காமல், அச்சப்படாமல், அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் சடலத்தை தூக்கி ஆட்டோவில் ஏற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தார்.

ஆய்வாளர் அல்லிராணி்யின் மனிதாபிமானம்! கலெக்டர் செய்த செயலால் போலீசார் நெகிழ்ச்சி!

பிரேத பரிசோதனையில் அமாவாசை மின்சாரத்தால் உயிரிழந்தது தெரியவந்ததும் அவ்வூர் மக்கள் அசடு வழிந்தனர். அதே நேரத்தில் கொரோனா அச்சத்தினால் அவ்வூர் மக்களே விலகிநின்ற போதும், அமாவாசையின் உடலை தொட்டு தூக்கிய ஆய்வாளர் அல்லிராணியின் மனிதாபிமானத்தைக்கண்டு பலரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில், 15.8.2020 அன்று நாட்டின் 74-வது சுதந்திர தின விழாவையொட்டி திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அதில் தெள்ளாறு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் அல்லிராணிக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி ஆட்சியர் கந்தசாமி மரியாதை செய்தார்.

விழாவின்போது மாவட்ட ஆட்சியர் நிற்கும் இடத்தில் அல்லிராணியை நிற்கவைத்து கீழே இறங்கி வந்து சல்யூட் அடித்து மரியாதை செய்த, ஆட்சியர் கந்தசாமி்யின் செயலால் போலீசார் நெகிழ்ச்சி அடைந்தார்கள்.