இ-பாஸ் விவகாரத்தில் மனித உரிமை மீறல்? – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

இ-பாஸ் விவகாரத்தில் மனித உரிமை மீறல்? – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் இ-பாஸ் தொடர்ந்து நடைமுறையில் இருப்பது மனித உரிமை மீறிய செயலா என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இ-பாஸ் விவகாரத்தில் மனித உரிமை மீறல்? – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இ-பாஸ் முறையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது.

இ-பாஸ் விவகாரத்தில் மனித உரிமை மீறல்? – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

நேர்மையான காரணங்களுக்காக இ-பாஸ் நிராகரிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டும் வேளையில், பணம் கொடுத்தால் எளிதாக இ-பாஸ் வாங்கிவிடலாம் என்ற நடைமுறையும் உள்ளது. இது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் வருகிறது.

இ-பாஸ் விவகாரத்தில் மனித உரிமை மீறல்? – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
இந்த நிலையில் மத்திய அரசு உத்தரவை மீறி தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையைத் தொடர்வது மனித உரிமை மீறிய செயலா என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து மாநிலத் தலைமைச் செயலாளர் நான்கு வாரங்களில் விளக்கம் அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.