‘சாதிப்பெயரை கேட்ட காவலர்’ விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!

 

‘சாதிப்பெயரை கேட்ட காவலர்’ விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!

திருப்பூர் அருகே மாஸ்க் அணியாத தம்பதியிடம் காவலர் ஒருவர் சாதிப்பெயர் கேட்ட சம்பவத்தில் திருப்பூர் எஸ்.பி பதில் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே இருக்கும் நால்ரோடு பகுதியில் காவலர் காசிராஜன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி மாஸ்க் போடாததால், அவர்களுக்கு காசிராஜன் அபராதம் விதித்தார். பின்னர், நோட்டில் அவர்களை பற்றிய விவரங்களை எழுத அவர்களது சாதிப்பெயரை கேட்டதால் ஆத்திரமடைந்த சிவக்குமார் காவலர் காசிராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

‘சாதிப்பெயரை கேட்ட காவலர்’ விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!

மாஸ்க் அணியாதவர்களிடம் காவலர் காசிராஜன், சாதிப்பெயர் கேட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், காசிராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து திருப்பூர் எஸ்.பி 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.