பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு கொடியேற்ற அனுமதி மறுப்பு:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

 

பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு கொடியேற்ற அனுமதி மறுப்பு:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அருகே இருக்கும் ஆத்துப்பாக்கம் பகுதியின் பஞ்சாயத்து தலைவரை தேசியக் கொடி ஏற்ற விடாமல் முன்னாள் தலைவரும் அவரது ஆதரவாளர்களும் தகராறு செய்துள்ளனர். இதே போல, குடியரசு தின விழாவிலும் அவரை கொடியேற்ற விடமால் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் அவமதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு கொடியேற்ற அனுமதி மறுப்பு:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது, பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை கொடியேற்ற விடாமல் தடுத்தது மனித உரிமை மீறல் ஆகாதா? முன்னாள் தலைவர், துணை தலைவர், செயலர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கை என்ன? என சரமாரியாக கேள்வியை முன்வைத்த அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து 2 வாரத்துக்குள் திருவள்ளூர் ஆட்சியர், எஸ்.பி பதில் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.