“உடல்களை மொத்தமாக எரிக்கக் கூடாது… கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்”

“உடல்களை மொத்தமாக எரிக்கக் கூடாது… கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்”

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுத்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். உயிரிழப்போரை எரிக்க இடமில்லாமல் டோக்கன் போடப்பட்டு, மின்மாயனங்களில் சடலங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள் மிக மோசமான நிலையில் நடத்தப்படுகின்றன. நதிகளில் வீசப்படுவது, நதிகளின் ஓரமாக எரிக்கப்படுவது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

“உடல்களை மொத்தமாக எரிக்கக் கூடாது… கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்”

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை கண்ணியத்தை மீறி மொத்தமாக எரிக்கக் கூடாது என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில், உடல்கள் வரிசையில் வைக்கப்படுவதை தவிர்க்க தற்காலிக தகனமேடை அமைக்கலாம் என்றும் உறவினர்கள் உடல்களை தொடாமல் இறுதி சடங்குகள் செய்ய அனுமதிக்கலாம் என்றும் இறந்தவர்களின் உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய முடியாத நிலையில் மாநில உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

“உடல்களை மொத்தமாக எரிக்கக் கூடாது… கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்”

மேலும், மின்மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மின்மாயனங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.