பட்டியலின ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதிய தீண்டாமை! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

 

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதிய தீண்டாமை! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோவையில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை நாற்காலியில் அமர விடாமல் மிரட்டியது, பெயர் பலகையில் ஊராட்சி மன்ற தலைவரின் பெயரை எழுத விடாமல் தடுத்தது தொடர்பாக மூன்று வாரத்தில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, கடந்த 21 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் , சாதிய தீண்டமையுடன் நடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.சி எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதிய தீண்டாமை! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம், கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது தொடர்பாக மூன்று வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.