முதன் முறையாக மனிதனுக்குப் பரவிய பறவைக் காய்ச்சல்! – ரஷ்யா தந்த அதிர்ச்சி

 

முதன் முறையாக மனிதனுக்குப் பரவிய பறவைக் காய்ச்சல்! – ரஷ்யா தந்த அதிர்ச்சி

முதன் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று பரவி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

மனிதர்களுக்கு கொரோனா போல, பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் மிக அச்சுறுத்தலாக உள்ளது. பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் லட்சக் கணக்கான கோழிகள் வேக வேகமாக அழிக்கப்படுவது வாடிக்கை. சமீபத்தில் வட இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. இதனால், தமிழகத்திலும் கூட கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டது.

முதன் முறையாக மனிதனுக்குப் பரவிய பறவைக் காய்ச்சல்! – ரஷ்யா தந்த அதிர்ச்சி

இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவாது என்று கூறப்பட்டது. இறைச்சியை வேக வைத்து சாப்பிடுவதால் மனிதர்களுக்கு வர வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், ரஷ்யாவில் மனிதர் ஒருவருக்கு H5N8 என்ற பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய தகவலை ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக உலக சுகாதார நிறுவவனத்துக்கு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த தொற்று மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் என்பதற்கான எந்த அறிகுறியும், வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா உலக மக்களை ஆட்டி படைத்து வருகிறது.

இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா வகை என்று கொரோனா வீரியம் கூடிக்கொண்டே செல்கிறது. புதிதாக ஜப்பானில் 91 பேருக்கு மாறுபாடு அடைந்த வேறு வகையான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் பறவைக் காய்ச்சல் மனிதருக்கு பரவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.