இங்கிலாந்தில் 1.2 பில்லியன் டாலர் செலவில் ஆராய்ச்சி மையம் உருவாக்கும் ஹுவாய் நிறுவனம்

 

இங்கிலாந்தில் 1.2 பில்லியன் டாலர் செலவில் ஆராய்ச்சி மையம் உருவாக்கும் ஹுவாய் நிறுவனம்

லண்டன்: சீனாவின் ஹுவாய் நிறுவனம் இங்கிலாந்தில் 1.2 பில்லியன் டாலர் செலவில் ஆராய்ச்சி மையம் உருவாக்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது.

சீனாவின் ஹூவாய் டெக்னாலஜிஸ் நிறுவனம் இங்கிலாந்தில் ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,389 கோடி) செலவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான திட்டமிடல் அனுமதியைப் பெற்றுள்ளது.

இந்த புதிய ஆராய்ச்சி மையத்தில் சுமார் 400 பேர் பணியாற்ற உள்ளனர். இந்த மையத்தில் ஃபைபர்-ஆப்டிக் தகவல்தொடர்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஆப்டிகல் கருவிகளை தயாரிக்கப்பட உள்ளது.

ஹுவாய் நிறுவனத்தின் கருவி சீனாவால் வேவு பார்க்க பயன்படுத்தப்படும் என்பதால் இங்கிலாந்தில் 5ஜி நெட்வொர்க்கை குறைவாக அனுமதிப்பது குறித்து அந்நாட்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என பிரிட்டன் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.