இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை.. மணிஷ் சிசோடியா பதிலடி

 

இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை.. மணிஷ் சிசோடியா பதிலடி

இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு துணை முதல்வர் சிசோடியா ஆதரவு தெரிவித்தார்.

சிங்கப்பூரில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த வைரஸ் சிறுவர்கள் மத்தியில் அதிகம் பரவும் தன்மை கொண்டதால் அந்நாட்டில் வரும் 28ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அந்நாட்டு முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தியை குறிப்பிட்டு, சிங்கப்பூரால் நம் நாட்டில் கொரோனா வைரஸ் 3வது அலை உருவாகலாம் என டெல்லிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்தார்.

இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை.. மணிஷ் சிசோடியா பதிலடி
அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், சிங்கப்பூரில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகக் காரணமாக அமையலாம். ஆகவே சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு விரைவாக தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.

இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை.. மணிஷ் சிசோடியா பதிலடி
சிங்கப்பூர்

அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு சிங்கப்பூர் அரசு இந்திய தூதரை அழைத்து தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்தது. இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போது விரைந்து ஆக்சிஜன் சப்ளை சிங்கப்பூரின் அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை. அவர்கள் ராணுவ விமானத்தின் மூலம் ஆக்சிஜனை வழங்கி இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தி உள்ளார்கள். நன்கு தெரிந்த வேண்டியவர்களிடமிருந்து பொறுப்பற்ற கருத்துக்கள் வருவது நீண்டகால நப்புறவை சேதப்படுத்தும். இந்தியாவின் பிரதிநிதியாக டெல்லி முதல்வர் பேசக்கூடாது என கெஜ்ரிவாலுக்கு குட்டு வைத்தார்.

இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை.. மணிஷ் சிசோடியா பதிலடி
எஸ்.ஜெய்சங்கர்

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பாஜக மற்றவர்களைப் பற்றி கவலைப்படாத, உணர்வுகளைப் புரியாத அரசியலைத் தொடங்கியிருக்கிறது. சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட வைரஸ் குழந்தைகளைப் பாதிக்கும் எனத் தெரிந்து தான், குழந்தைகள் மீது அக்கறை கொண்டு, கவலைப்பட்டு கெஜ்ரிவால் நேற்று கருத்துத் தெரிவித்தார். ஆனால், பாஜக சிங்கப்பூரைப் பற்றித் தான் கவலைப்படுகிறது. தங்களின் தோற்றத்தை பெரிதாக உலகளவில் விளம்பரப்படுத்தவே குழந்தைகளுக்கான தடுப்பூசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்தது. இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.