என் மீது 30 வழக்குகளை போட்டுள்ளனர்- ஹெச்.ராஜா

 

என் மீது 30 வழக்குகளை போட்டுள்ளனர்- ஹெச்.ராஜா

தமிழகத்தில் அறநிலையத்துறையின் செயல்பாடு இந்து மதத்திற்கு எதிராக உள்ளதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

என் மீது 30 வழக்குகளை போட்டுள்ளனர்- ஹெச்.ராஜா

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “ தமிழகத்தில் 38 ஆயிரத்து 665 கோவில்கள் இருப்பதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் மொத்தம் 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அறநிலையத்துறை பொறுப்பேற்ற பின்னர் ஒரு கோவிலாவது கட்டப்பட்டுள்ளதா? 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம் கோவில்களுக்கு உள்ளது. 130 நாளில் இந்த நிலம் மீட்கப்பட்டுள்ளதா? 22 ஆயிரத்து 600 வணிக வளாகங்கள்,33 ஆயிரத்து 665 காலி மனையிடங்கள் உள்ளது. இது யாருடைய ஆக்கிரமிப்பில் உள்ளது என 12 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பழனி செந்திலாண்டவர் கல்லூரி மற்றும் குழிதுறை கல்லூரியில் மாற்று மதத்தினர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறநிலையதுறை ஊழியர்கள் ஒருவருக்கு கூட கடமை கிடையாது, பக்தி கிடையாது. தமிழ்நாட்டில் 30 வழக்குகள் என்மீது போட்டுள்ளனர். எத்தனை வழக்குகள் வேணுமானாலும் போட்ட்டும். திமுக அதிமுக எந்த கட்சியாக இருந்தாலும் பராவாயில்லை. அதிமுக ஆட்சியில்தான் என்மீது வழக்குகள் போடபட்டது. தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி ஆளுனராக நியமிப்பது புதிதில்லை” எனக் கூறினார்.