திமுகவை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார்- ஹெச்.ராஜா

 

திமுகவை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார்- ஹெச்.ராஜா

திருவாரூர் மாவட்டம் பில்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “திமுகவை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார். இதைத்தான் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி திராவிட இயக்கங்களை அழிக்க தமிழகத்தில் முயற்சி நடப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்டவைகளை விற்றதன் மூலம் தான் வேளாண் துறையில் ஜிடிபி 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

திமுகவை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார்- ஹெச்.ராஜா

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு 970 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மக்கள் பட்டினியாக இருக்கும்போது இது அவசியமா என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு என கொரோனா ஊரடங்கு காலம் முழுவதும் மத்திய அரசு ஒன்றரை லட்சம் கோடி செலவு செய்திருப்பது கமல்ஹாசனுக்கு தெரியாதா? திமுக டெல்டா விவசாயிகளின் எதிரி. திமுக பொருளாளர் டிஆர் பாலுவுக்கு பால் கொம்பில் இருந்து வருகிறதா காம்பிலிருந்து வருகிறதா என்பதே தெரியாது. ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறது எனக் கூறுவது கற்பனையானது. பாஜகவோ ரஜினிகாந்தோ இதனைத் தெரிவிக்கவில்லை. தெரிவிக்கும் வரை காத்திருங்கள். கூட்டணி குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்” எனக் கூறினார்.