“என் வாழ்க்கை அழுக்கானது” : திருமண தோஷம் இருப்பதாக கூறியதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

ப்ரீத்தி தனது வீட்டில் விரக்தியுடன் கூறி வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்தவர் பவன். இவருக்கு ப்ரீத்தி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2 வாரங்களில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று ப்ரீத்தி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் ப்ரீத்தி அறையிலிருந்து வெளியே வராததால் அவரது தங்கை சென்று பார்த்த போது அவர் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதை கண்ட அவரின் குடும்பத்தினர் அலரி துடித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ப்ரீத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரின் அறையிலிருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அதில், ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என் வாழ்க்கை அழுக்கானது. நான்தான் காரணம்’ என்று எழுதியிருந்தார்.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை பவனிடம் நடத்திய விசாரணையில், மேட்ரிமோனியல் மூலமாக அறிமுகமான இவர்கள் காதலிக்க தொடங்கியதுடன் அவர்களின் காதல், நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது. ஆனால் ப்ரீத்திக்கு தோஷம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சில பூஜைகள், பரிகாரங்களை முடித்துவிட்டு திருமணத்தை நடத்தலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர். அதை ஏற்க மறுத்த ப்ரீத்தி தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்புவரை இந்த திருமணம் நடக்காது என ப்ரீத்தி தனது வீட்டில் விரக்தியுடன் கூறி வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

இன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

மும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....