கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் லாபத்தை பறிகொடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம்… இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் லாபத்தை பறிகொடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம்… இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்.) கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிகர லாபமாக ரூ.27 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 99 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,970 கோடி ஈட்டியிருந்தது.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் லாபத்தை பறிகொடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம்… இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு குறைந்தது மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கையிருப்பு நஷ்டம் அதிகரித்தது, அன்னிய செலாவணி நஷ்டம் போன்ற காரணங்களால் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் லாபம் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. கையிருப்பு இழப்பு அல்லது நஷ்டம் என்பது, நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விலையில் மூலப்பொருளை (கச்சா எண்ணெய்) ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்கும் ஆனால் அதனை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி அதனை சுத்திகரிப்பு முடிந்த நேரத்தில் சர்வதேச விலை குறைந்து விடும். ஆக வாங்கிய விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் சரக்கு இழப்பு ஏற்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் லாபத்தை பறிகொடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம்… இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

2020 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.71,268 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.72,840 கோடியாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததுதான் வருவாய் குறைந்ததற்கு முக்கிய காரணம். 2020 மார்ச் காலாண்டில் எச்.பி.சி.எல். நிறுவனம் உள்நாட்டில் 92.5 லட்சம் டன் எரிபொருள் விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் 1 கோடி டன் எரிபொருளை விற்பனை செய்து இருந்தது. 2019-20ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.9.75 வழங்க எச்.பி.சி.எல். பரிந்துரை செய்துள்ளது.