எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்பியாக வேண்டும்… அமைச்சர் பதவியை தக்கவைக்க என்ன பிளான்?

எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்பியாக வேண்டும்… அமைச்சர் பதவியை தக்கவைக்க என்ன பிளான்?

நரேந்திர மோடி இரண்டாம் முறை பிரதமரான பின்னர் முதன்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. இதில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவராக இருந்த எல்.முருகன். இவர் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். பாஜ கட்சி விதிகளின்படி ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும். ஒன்று கட்சிப் பதவியில் இருக்கலாம். இல்லையென்றால் அரசு பதவியில் இருக்க முடியும்.

எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்பியாக வேண்டும்… அமைச்சர் பதவியை தக்கவைக்க என்ன பிளான்?

இரண்டிலுமே அங்கம் வகிக்க முடியாது. இது பாஜகவின் உட்கட்சி சட்டத்திட்டத்திகுற்பட்டது. இதனால் அவர் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இனியும் நீடிக்க முடியாது. தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றதும் அவர் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தது அனைவருக்கும் நியாபகம் இருக்கலாம். அதற்குப் பின்பே எல்.முருகன் தலைவராக்கப்பட்டார். இது ஒருபுறம் இருந்தாலும் இணை அமைச்சராகியுள்ள முருகன் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையில் கட்டாயம் உறுப்பினராக வேண்டும்.

எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்பியாக வேண்டும்… அமைச்சர் பதவியை தக்கவைக்க என்ன பிளான்?

நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கலாம்; ஆனால் ஒரே கன்டிஷன் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவை உறுப்பினராகியிருக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி முருகன் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லை. அதேபோல மக்களவை தேர்தலில் போட்டியிட்டு உள்ளே நுழைவதற்கும் சாத்தியமில்லை. மாநிலங்களவை அதாவது ராஜ்யசபா உறுப்பினராவதன் மூலமே அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியும்.

எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்பியாக வேண்டும்… அமைச்சர் பதவியை தக்கவைக்க என்ன பிளான்?

உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், எந்த அவையிலும் இல்லாமல் தான் நிதியமைச்சரானார். ஆனால் அடுத்த ஆறு மாதத்திற்குள் ஆந்திரப் பிரதேசம் சார்பில் ராஜ்யசபா எம்பியானார். அதேபோல முருகனும் ராஜ்யசபா எம்பியாக வேண்டும். தற்போது தமிழ்நாடு சார்பில் ராஜ்யசபாவில் மூன்று பதவிகள் காலியாக இருந்தாலும், சட்டப்பேரவை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்றுள்ளதால் அக்கட்சிக்கே அந்தப் பதவிகள் சேரும்.

எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்பியாக வேண்டும்… அமைச்சர் பதவியை தக்கவைக்க என்ன பிளான்?
தாவர்சந்த் கெலாட்

கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் எம்எல்ஏக்கள் பலமில்லை. ஆகவே அவர் தமிழ்நாட்டிலிருந்து எம்பியாக முடியாது. வேறொரு மாநிலத்திலிருந்துதான் எம்பியாக வேண்டும். அதற்கு பாஜக ஆளும் வேறொரு மாநிலம் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னதாக ராஜ்யசபா எம்பியாகவும் மத்திய சமூகநீதித் துறை அமைச்சராகவும் இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்பியாக வேண்டும்… அமைச்சர் பதவியை தக்கவைக்க என்ன பிளான்?

இதனால் அவர் எம்பி மற்றும் அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்தார். கெலாட்டைப் பொறுத்தவரை அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்பியானார். தற்போது அந்தப் பதவி காலியாக உள்ளதால் அந்தப் பதவிக்கு எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்படுவார். அம்மாநிலத்தில் பாஜக தான் ஆளுங்கட்சி என்பதால், அம்மாநிலத்தின் உதவியுடன் ராஜ்யசபா எம்பியாகி எல்.முருகன் அமைச்சர் பதவியைத் தக்கவைப்பார்.